சென்னையில் இன்று ராணுவ கண்காட்சியை துவக்கி வைக்க வந்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி காட்டப்பட்டு வருகிறது.
இராணுவ கண்காட்சியைத் தொடங்கி வைப்பதற்காகவும், அடையாறு புற்றுநோய் மையம் மற்றும் சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் மோடி, இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து சென்னை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்றாத மோடியே திரும்பி போ என்று கோஷமிட்டனர். ”கோ பேக் மோடி” என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
