Primary Menu

Top Menu

September 25, 18

நரேந்திர மோடி தலை குனிய காரணம் என்ன !!

புதுடெல்லி: ரபேல் போர் விமானம் வாங்கும் விவகாரத்தில், பிரதமர் மோடி குறித்து ராகுல்காந்தி குற்றச்சாட்டுகளை கூறிவரும் நிலையில், இந்தி நடிகை ஒருவரை வைத்து பாஜ விளக்கம் அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போதே இதுதொடர்பாக பிரான்ஸ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஒரு போர் விமானத்தின் விலை ரூ.526 கோடி ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய மத்திய பாஜ அரசு ஒரு போர் விமானத்தை ரூ.1,670 கோடி விலையில் வாங்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை வெளியிட காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், ‘இது ரகசிய ஒப்பந்தம் என்பதால் விவரங்களை வெளியிட முடியாது’ என்று மத்திய அரசு கூறி வருகிறது.

இந்நிலையில், ரபேல் விமானம் வாங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுக்கூட்டங்களில் குற்றம் சாட்டி வருகிறார். மக்களவையில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போதும் பகிரங்கமாக கூறினார். நேற்று, கர்நாடக மாநிலம் பீடாரில் நடந்த பேரணியில் அவர் பேசுகையில், ‘‘பிரதமர் மோடி என் கண்களைப் பார்த்து பேசத் தயங்குகிறார். நான் பேசும்போதெல்லாம் அவர் தலையைக் குனிந்து கொள்கிறார். என் கண்களை நிமிர்ந்து பார்த்துப் பேசும் தைரியம் அவருக்கு இல்லை. திருடியவர்களால் தான் கண்களைப் பார்த்துப் பேசுவதற்கு தைரியம் இருக்காது’’ என்றார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், ரபேல் ஒப்பந்தத்தில் என்ன நடந்தது என்பதை இந்தி நடிகை பல்லவி ஜோஷியை வைத்து பாஜவின் தொழில்நுட்பப் பிரிவு தனது டுவிட்டர் பக்கத்தில், 2.19 நிமிடம் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.

அதில், ‘மலிவான விலையில் போர் விமானங்கள் வாங்குவதே ரபேல் ஒப்பந்தத்தின் நோக்கம். இதுபோல், ஏவுகணைகளையும் வாங்குவோம். அவற்றின் உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு ரூ.12,500 கோடி மிச்சம் ஆகியுள்ளது’ என்று பல்லவி ஜோஷி கூறுகிறார். அவர் பேசும் போது, இடையிடையே ‘உருளைக்கிழங்கு தொழிற்சாலை’ என்று யாரையோ பெயர் குறிப்பிடாமல் கிண்டல் செய்துள்ளார்.

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon