Primary Menu

Top Menu

October 16, 18

மொபைல் போன் தேவைதானா? – இளைஞர் கேட்கின்றனர் . . .

அநேக நாடுகளில் மொபைல் போன்களுக்கு மவுசு கூடிக்கொண்டே போகிறது. அவற்றால் பல சௌகரியங்கள் உண்டு. உங்கள் நண்பர்களும் பெற்றோரும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் உங்களுடன் தொடர்புகொள்ளலாம்; அதேபோல் நீங்களும் அவர்களுடன் பேசலாம். சில மாடல் மொபைல் போன்களில், சுருக்கமாக டைப் அடித்து செய்திகளை பரிமாறிக் கொள்ள முடியும். சில மொபைல் போன்களில் இன்டர்நெட் வசதியும் உண்டு; இதனால் வெப் சைட்டுகளும் ஈ-மெயிலும் உங்கள் வசம்.

உங்களிடம் ஏற்கெனவே ஒரு மொபைல் போன் இருக்கலாம், அல்லது அதை வாங்குவதைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம். எப்படியிருந்தாலும், எதிலுமே சாதகமான பக்கமும் உண்டு பாதகமான பக்கமும் உண்டு என்பதை நீங்கள் நினைவில் வைப்பது நல்லது. மொபைல் போனினால் நன்மைகள் சில இருந்தாலும் அதன் மறுபக்கத்தையும் நீங்கள் கட்டாயம் அறிய வேண்டும்; ஏனென்றால் அதை வாங்க நீங்கள் தீர்மானித்துவிட்டாலும் அதனால் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என முழுமையாக அறிந்திருந்தால் அதை ஞானமாக பயன்படுத்த உதவியாக இருக்கும்.

‘செலவை கணக்குப் பாருங்கள்’

 மிக மலிவான விலையில் அல்லது இலவசமாகக்கூட ஒரு மொபைல் போன் உங்களுக்குக் கிடைக்கலாம் என்பது உண்மை. இருந்தாலும் “பில் திடீரென்று எகிறிவிடலாம்”  மேலும், லேட்டஸ்ட் புரோகிராம்களை பெற வேண்டும், விலையுயர்ந்த மாடல்களை வாங்க வேண்டும் என்ற துடிப்பு எப்போதும் இருக்கலாம்.

பில்லை உங்கள் பெற்றோர் கட்டினாலும், எத்தனை செலவாகிறது என்பதில் கவனமாக இருப்பது முக்கியம். “பிள்ளைகளுடைய மொபைல் போன் பில்லை கட்டுவதற்காகவே சில தாய்மார்கள் கூடுதலாக பார்ட்-டைம் வேலைக்கு செல்கிறார்கள்; அதுவும் அந்த பிள்ளைகளுக்கு மொபைல் போன் தேவையே இல்லை.” இப்படிப்பட்ட ஒரு சுமையை உங்கள் பெற்றோரின் தலையில் சுமத்த நீங்கள் நிச்சயம் விரும்ப மாட்டீர்கள் அல்லவா?

“நேரத்தை வீணாக்குகிறது”

ஆரம்பத்தில் போனை அவசியமான போது மட்டும் பயன்படுத்தும் அநேகர் பிற்பாடோ தாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிக நேரத்தை போன் பேசுவதில் செலவழிக்கிறார்கள். இதனால் முக்கியமான காரியங்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடுகிறது. ஒருகாலத்தில், குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடும்போது நிறைய நேரம் செலவழித்தார். ஆனால் “இப்போதோ, சாப்பிட்டு முடித்த கையோடு அவரவர் [மொபைல் போன்களை] எடுத்துக்கொண்டு அவரவர் ரூம்களுக்கு போய்விடுகிறார்கள்.

16 முதல் 20 வயதுள்ள இளைஞர்களில் மூன்றில் ஒரு பங்கினர், எழுத்தில் தொடர்புகொள்ள மொபைல் போனில் செய்திகளை அனுப்பும் முறையையே பெரிதும் வரவேற்கின்றனர் போனில் பேசுவதைவிட இவ்வாறு எழுத்தில் “பேசுவதால்” பணம் குறைவாகவே செலவானாலும் செய்திகளை டைப் அடிப்பதற்கு நேரம் அதிகமாகவே செலவாகிறது.

மொபைல் போனின் சொந்தக்காரர்கள் அநேகர் ஒரு மாதத்திற்கு எத்தனை மணிநேரம் அதில் பேசுகிறார்கள் என சற்று நிதானித்து மொத்தமாக கூட்டிப் பார்த்தால் அவர்களே திடுக்கிட்டுப் போவார்கள். அநேகரின் விஷயத்தில், மொபைல் போன் நேரத்தை விழுங்குகிறதே தவிர அதை மிச்சப்படுத்துவதில்லை.  உங்கள் சூழ்நிலைக்கு அது உண்மையிலேயே தேவைப்பட்டாலும் அதைப் பயன்படுத்தும்போது நேரத்தை கவனத்தில் வைப்பது முக்கியம்.

ரகசிய பேச்சு

போன் கால்கள் வீட்டிற்கு வராமல் நேரடியாக உரியவருக்கு வருவதால், பிள்ளைகள் யாரிடம் பேசுகிறார்கள் என்றே பெற்றோருக்கு தெரியாதிருக்கும் ஆபத்து இருக்கிறது; அவர்கள் போன் பேசுகிறார்களா இல்லையா என்று கூட அவர்களுக்கு தெரியாதிருக்கலாம். இதனால் எதிர்பாலாருடன் ரகசியமாக பழக மொபைல் போன்கள் சில இளவட்டங்களுக்கு கைகொடுத்திருக்கின்றன. சிலர் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறார்கள்; பொதுவாக மற்றவர்களோடு தொடர்புகொள்ளும்போது கடைப்பிடிக்கும் வரம்புகளை மீறியிருக்கிறார்கள்.

எழுத்தில் ‘பேசுகையில்’ எவராலும் கண்காணிக்க முடிவதில்லை உங்களுடன் உரையாடும் நபரை பார்க்க முடியாதது அல்லது கேட்க முடியாதது உங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும். “எழுத்தில் செய்திகளை பரிமாறிக்கொள்வது, ஒட்டுதலில்லாமல் உறவாட சிறந்த வழியென சிலர் நினைக்கிறார்கள். நேருக்கு நேர் சொல்ல துணியாத விஷயங்களை சிலர் எழுதி அனுப்பலாம்”

வரம்புகள் வையுங்கள்

மொபைல் போனை வாங்க நீங்கள் திட்டமிடுகிறீர்கள் என்றால், அது உண்மையிலேயே தேவைதானா என தீர்மானிப்பதற்கு முதலில் உங்கள் சூழ்நிலையை ஏன் கவனமாக சீர்தூக்கிப் பார்க்கக் கூடாது? இதைக் குறித்து உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள்.

மொபைல் போனை வாங்க நீங்கள் தீர்மானித்தாலும் அதைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துவது முக்கியம். எவ்வாறு? நியாயமான வரம்புகளை வையுங்கள். உதாரணத்திற்கு, எத்தனை புரோகிராம்களை பயன்படுத்துவது அல்லது எவ்வளவு நேரத்தையும் பணத்தையும் செலவிடுவது என்ற விஷயத்தில் வரம்பு வையுங்கள். பெரும்பாலான கம்பெனிகள் நீங்கள் போனை பயன்படுத்திய விவரங்களை எல்லாம் முழுமையாக பில்லில் கொடுப்பதால் அவ்வப்போது உங்கள் பெற்றோருடன் அதை சீர்தூக்கிப் பார்க்கலாம். மொபைல் போனை அளவாக பயன்படுத்துவதற்கு, முதலில் கட்டணம் செலுத்திவிட்டு பயன்படுத்தும் மாடலை வைத்துக்கொள்வது சௌகரியமாக இருப்பதாக சிலர் கண்டிருக்கிறார்கள்.

மேலும், போன் கால்களுக்கும் செய்திகளுக்கும் நீங்கள் எப்போது, எப்படி பதிலளிக்கிறீர்கள் என்பதையும் கவனமாக சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கென்று நியாயமான கட்டுப்பாடுகளை வகுத்துக்கொள்ளுங்கள். “நான் மெயில்களை தினமும் ஒருமுறைதான் திறந்து பார்ப்பேன், அதுவும் முக்கியமான மெயில்களுக்குத்தான் பொதுவாக பதில் அனுப்புவேன். இதனால், கண்ட விஷயங்களையெல்லாம் இப்போது என் பிரண்ட்ஸ் அனுப்புவதில்லை. ரொம்ப அவசரமான செய்தியாக இருந்தால் எனக்கு எப்படியும் போன் செய்யத்தானே போகிறார்கள்.” யாரிடம் தொடர்புகொள்கிறீர்கள் என்பதைக் குறித்து கவனமாக இருப்பது அதைவிட முக்கியம். மற்றவர்களுக்கு உங்கள் போன் நம்பரைக் கொடுப்பதில் ஜாக்கிரதையாக இருங்கள்.

முக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, அவசரமான போன் எதுவும் வராது என தெரிந்திருக்கையில், அநேகர் போனை ஆஃப் செய்துவிடுகிறார்கள் அல்லது சத்தம் கேட்காதபடி வைத்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் மொபைல் போனை தூரத்தில் எங்கேயாவது வைத்துவிடுகிறார்கள். பெரும்பாலான மெயில்களுக்கு பிற்பாடு பதிலளித்தால் போதாதா என்ன?

ஒரு மொபைல் போனை பயன்படுத்த நீங்கள் தீர்மானித்துவிட்டால், அதை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உறுதியாயிருங்கள், அது உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள்.

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்?

பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon