Primary Menu

Top Menu

August 15, 18

மக்கள் நீதி மய்யத்தில் சேருமாறு எனக்கே அழைப்பா – தமிழிசை கொந்தளிப்பு

மக்கள் நீதி மய்யத்தில் சேருமாறு ஈமெயில் அழைப்பு வந்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள்  நடைபெறுகின்றன.

தெள்ளத் தெளிவாக தெரிகிறது

மக்கள் நீதி மய்யத்தில் சேர எனக்கும் இ- மெயிலில் அழைப்பு வந்தது. பாஜக மாநில தலைவரான நான் எப்படி கமல் கட்சியில் உறுப்பினராவேன். உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடைபெறுகிறது. அந்த மெயிலில் தமிழிசை உறுப்பினராக இணைந்தமைக்கு உளமார்ந்த நன்றி என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். மேலும் நீங்களும் நானும் நாம் ஆனோம் என்றும் நாளை நமதே என்றும் தெரிவித்துள்ளார். அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டை எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. என்று தமிழிசை கூறியுள்ளார்.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon