Primary Menu

Top Menu

October 22, 18

சீனாவில் தளபதியின் “மெர்சல்”

மெர்சல் படம் ரூ.200 கோடிக்கும் மேல் வியாபாரம் ஆனதாக சொல்லப்பட்டது.

இந்தநிலையில் அடுத்து, ‘மெர்சல்’ படம் சீனாவில் வெளியாகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் படம் அங்கு வெளியாகுமாம். சீனாவின் பிநிசி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘மெர்சல்’ திரைப்படத்தின் உரிமத்தைப் பெற்றுள்ளது. அது சீன மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தியேட்டர்களில் வெளியிடப்பட உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய சினிமா மார்க்கெட்டாக கருதப்படும் சீனாவில், அமீர்கானின் படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் ஈட்டியது, அதுபோல் ‘மெர்சல்’ ஜெயிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ‘பாகுபலி–2’ படமே எதிர்பார்த்ததைவிட மிக சுமாரான வசூலை மட்டுமே அங்கு பெற்றது.

சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்தான் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர்–1 நடிகர். இவர் ‘செட் செய்யும் ‘பாக்ஸ் ஆபீஸ்’ வசூலைத்தான் இன்றும் பல நடிகர்கள் துரத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் என்றால் கபாலி, எந்திரன் ஆகிய 2 படங்களும் தான். இந்த படங்கள் ரூ.280 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தன. இதற்கு அடுத்த இடத்தில், ‘மெர்சல்’ ரூ.254 கோடி வசூல் செய்துள்ளது.

தற்போது, ‘மெர்சல்’ சீனாவில் ‘ரிலீஸ்’ ஆவதையும், அந்த படம் சீனாவில் எத்தனை கோடி வசூல் செய்யும்? என்பதையும் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராட்சசன் படக்குழுவினரை பாராட்டிய மு.க.ஸ்டாலின்!!

தமிழ் சினிமாவில் நல்ல வசூலை பெற்று, அதன்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon