Primary Menu

Top Menu

October 20, 18

தீவிரவாதிகளின் மத்தியில் ஆப்கானிஸ்தானில் சார்லி சாப்ளின்!!

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆஃப்கானிஸ்தானில் இளைஞர் ஒருவர் சார்லி சாப்ளின் வேடமிட்டு மக்களைக் கவர்ந்து வருகிறார்.

 

25 வயது இளைஞரான கரீம் ஆசிர் (Karim Asir) சாப்ளின் போலவே வேடமிட்டுக் கொண்டு பூங்காக்கள், தொண்டு நிறுவன நிகழ்ச்சிகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

 

தீவிரவாதத்தால் தொடரும் துன்பங்களை மறந்து மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே தனது நோக்கம் என்கிறார் கரீம் ஆசிர்.

 

தனது நடவடிக்கைகள் மதத்துக்கு எதிரானது என்று கூறி தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அச்சத்தை ஒதுக்கிவிட்டு தனது பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் ஆசிர் கூறுகிறார்.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon