Primary Menu

Top Menu

October 21, 18

மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 68 ஏக்கர் இடம் ஆக்கிரமிப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 68 ஏக்கர் இடம்  நான்காயிரம் கோடி மதிப்பிலான இடம் சட்ட விரோதமாக விற்பனை என திருத்தொண்டர் சபையினர் புகார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இடங்கள் உள்ளன இந்தஇடத்தின் மூலம் வருமானங்கள் கோயிலின் சிறப்பு பூஜைகள் மற்றும் ஊழியர்களின் சம்பளம் பொன்ற செலவினங்கள் பயன் படுத்தி வந்தனர் இந்நிலையில் தற்போது அந்த இடங்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யபட்டுள்ளது என திருதொண்டர்கள் சபையினர் குற்றம் சாட்டி அந்த இடங்களை வருவாய்துறை மற்றும் இந்து அறநிலை துறையினர் வைத்து  ஆய்வு செய்து வருகின்றனர் .
இன்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பகுதியில் ஆய்வு செய்த திருத்தொண்டர் சபையினர் நூறு ஆண்டுகளுக்கு முன் உள்ள ஆவனங்களை வைத்து ஆய்வு செய்தனர் இதில் மாட்டுத்தாவணி பகுதியில் மட்டும் சுமார் 68 ஏக்கர் நான்காயிரம் கோடி மதிப்பிலான இடம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக  தெரிவித்தனர் மேலும் இந்த இடங்களை மீட்பதற்கன அனைத்து அனைத்து நடவடிக்கைகள் எடுக்க பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon