Primary Menu

Top Menu

September 20, 18

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்குமாறு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தனி நீதிபதி கடந்த ஏப்ரல் மாதத்தில், மெரினாவில் ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி அளித்து இருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து  தமிழ்நாடு காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் அமர்வு, மெரினாவில் எவ்வித போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது எனவும், மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தமிழக அரசு எடுத்த முடிவு சரியானதுதான் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், தனி நீதிபதி அளித்த அனுமதியை  ரத்து செய்தனர்.

 

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon