Primary Menu

Top Menu

October 15, 18

மாமல்லபுரத்தில் நடந்த அதிசயம்!!

காஞ்சிபுரம் : உலக பிரசித்தி பெற்ற மாமல்லப்புரம் கடற்கரை கோவில் அருகே கடலில் மூழ்கியிருந்த மகிஷாசுரமர்த்தினி குடவரைக் கோவில் தற்போது வெளிப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.மாமல்லபுரத்தில் 6 மாதங்களுக்கு ஒரு முறை கடல் நீரோட்டத்தில் விசை மாற்றம் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் சில நாட்களாக மாமல்லப்புரத்தின் கடல் நீரோட்டத்தில் விசை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விசை மாற்றத்தால் கடல் நீர் உள்வாங்கி உள்ளது. கடல் உள்வாங்கியதால் 200 மீட்டர் அளவிற்கு மணற்பரப்பு வெளிப்பட்டுள்ளது.

இதனால் கடல் நீரில் மூழ்கி இருந்த குடவரை சிற்பங்கள் மற்றும் பாறைகள் வெளிப்ப்பட்டுள்ளன. இதில் மகிஷாசுரமர்த்தினி குடவரைக் கோயிலும் அடக்கம். இன்னும் 2 மாதங்கள் வரை இந்த மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தை காணலாம். இந்நிலையில் மீண்டும் இந்த சிற்பம் கடலுக்குள் மூழ்குவதற்குள் அதனை பாதுகாக்கும் வகையில் ரசாயண கலவை பூசும் பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோருகின்றனர். இதுகுறித்து மாமல்லப்புரம் தொல்லியல் துறை அலுவலர் பரணிதரனிடம் கேட்டபோது கடற்கரை கோயிலின் வளாகத்தில் இருந்தே மகிஷாசுரமர்த்தினி கோவிலுக்கு செல்லும் வகையில் சிறிய மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன் என்று தெரியுமா?

திருமணம் முடிந்த சுமங்கலிப் பெண்கள்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon