Primary Menu

Top Menu

October 15, 18

மல்லையா விமானத்தால் 10 கோடி ரூபாய் நஷ்டம்

விஜய் மல்லையா விமானத்தால் மும்பை விமான நிலையத்துக்கு ரூ.10 கோடி பார்க்கிங் கட்டண வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உட்பட  17 வங்கிகளிடம் வாங்கிய 6,963 கோடி கடன், வட்டியுடன் சேர்த்து 9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. இது தவிர, கிங்பிஷர் விமான நிறுவனம் சேவை வரியை அரசுக்கு செலுத்தவில்லை. இத்துடன் சேர்த்து ரூ.938 கோடி வரியை வசூலிக்க மல்லையாவின் ஜெட் ஏர்பஸ் 319 சொகுசு விமானத்தை சேவை வரித்துறை 2013ம் ஆண்டு பறிமுதல் செய்து, மும்பை விமான நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளது.

இந்த விமானம் ஆடம்பர வசதிகளை கொண்டது. நீதிமன்ற அனுமதி பெற்று இதை ஏலத்துக்கு விட்டும் இதுவரை விற்க முடியவில்லை. தற்போது இந்த விமானம் இயக்க முடியாத நிலையில்தான் உள்ளது. ரிப்பேர் செய்யக்கூட முடியாது. இதனால் 5 ஆண்டுகளாக மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கு வந்து செல்லும் விமானங்கள் ஒரு மணி நேரத்துக்கு ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை பார்க்கிங் கட்டணமாக செலுத்துகின்றன. மல்லையாவின் விமானம் இலவசமாகவே நிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி விமான நிலையத்துக்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக,விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் வேட்டியும் சேலையும்!!

வேட்டிக்கும் சேலைக்கும் இருக்கும்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon