Primary Menu

Top Menu

July 19, 18

மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவராக கு.ஞானசம்பந்தன் நியமனம்

நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது. அங்கீகாரம் பெற்றபின், முதல் கொடியேற்று விழா இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவில் கட்சி தலைவர் கமல் கலந்துகொண்டு கொடியை ஏற்றி வைத்து பேசினார். மேலும், கட்சியின் புதிய நிர்வாகிகளை கமல் அறிவித்தார். அப்போது, கட்சியின் துணைத்தலைவராக கு.ஞானசம்பந்தன், செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக சுகா நியமிக்கப்பட்டிருப்பதாக கூறினார். செயற்குழு உறுப்பினர்களாக கமீலா நாசர், மெளரியா, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கட்சி அங்கீகாரம் பெற்றபின் நடந்த கொடியேற்றம் என்பதால் ஏராளமான தொண்டர்கள் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டோல்கேட் தடுப்புகளை கையால் உடைத்து சென்ற எம் எல் ஏ!!

டோல்கேட் பணியாளர்கள் தாமதப்படுத்தியதால்...

Leave a Reply