Primary Menu

Top Menu

October 20, 18

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மலேசியக் கவிஞரின் ஆய்வுரை

“மலேசியாவில் மரபுக் கவிதைகளின் நிலை” என்ற தலைப்பில் 12வது ஆய்வரங்கம் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் முனைவர் கா.மு.சேகர் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் கோ.விசயராகவன் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச.நடராஜன் இ.ஆ.ப. தலைமையுரை வழங்கி சிறப்பித்தார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலர் திரு.இரா.வெங்கடேசன் இ.ஆ.ப. விழாப் பேருரை வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் முனைவர் இ.பசும்பொன் வாழ்த்துரை வழங்கினார்.

மலேசியா, மலேசிய நண்பன் நாளிதழ் செய்தியாளர் மற்றும் கவிஞர் திரு.ந.கு. முல்லைச்செல்வன் “மலேசியாவில் இன்றைய மரபுக் கவிதைகளின் நிலை” என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கி சிறப்பித்தார்.

 

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon