IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஸ்ம்யூல் மிர்ச்சி கவர் ஸ்டாரின் தமிழகத்தின் பெரிய கவர் ஆர்டிஸ்ட் தேடல் தொடக்கம்

4


தமிழகத்தின் மிகப் பெரிய கவர் ஆர்டிஸ்ட் தேடல் – ஸ்ம்யூல் மிர்ச்சி கவர் ஸ்டார் தமிழ் – இதோ வந்துவிட்டது. வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் மிகச் சிறந்த வாய்ப்பாக வெற்றி பெற்றவர் மிர்ச்சி மியூசிக் விருதுகள் தமிழ் நிகழ்ச்சியின் போது இசைத் துறையினர் முன்னிலையில் பாடுவார்.


ரேடியோ மிர்ச்சியின் ஓர் அங்கம் ஸ்ம்யூல் மிர்ச்சி கவர் ஸ்டார் தமிழ் ஆகும். இதன் டைடில் ஸ்பான்சர் ஸ்ம்யூல் மற்றும் இணை ஸ்பான்சர் ம்யூஜிக் லௌஞ்ச். வானொலி, தொலைக்காட்சி, டிஜிடல் விளம்பரம் மூலம் தமிழ் பேசும் ரசிகர்களை இலக்காகக் கொண்டது ஸ்ம்யூல் மிர்ச்சி கவர் ஸ்டார் தமிழ் ஆகும். இதில் பங்கேற்க ஸ்ம்யூல் செயலியைப் பதிவிறக்கம் செய்து கவர் நுழைவுக்காகப் பாட வேண்டும்.


போட்டியின் முதல் கட்டத்தில் அனைத்து விண்ணப்பங்களையும் ட்ரூன் ஸ்கூல் ஆஃப் மியூசிக் பரிசீலித்து மிகச் சிறந்த 100 விண்ணப்பங்களைத் தேர்ந்தெடுக்கும். தர மதிப்பீட்டுக்கு அடிப்படையான வாக்களிப்புக்கு வசதியாக 100 சிறந்த விண்ணப்பங்களும் ஸ்ம்யூல் மிர்ச்சி கவர் ஸ்டார் www.mirchicoverstar.com வலைதளத்தில் பதிவேற்றப்படும். மிர்ச்சி கவர் ஸ்டார் நடுவர்களான சக்திஸ்ரீ கோபாலன், கௌஷிக் க்ரிஷ், விஷ்ணுப்பிரியா ரவி ஆகியோரும் 100 விண்ணப்பங்களைப் பரிசீலிப்பர். 100 விண்ணப்பங்களுக்கும் மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற ரேடியோ மிர்ச்சி ஆர்ஜே-க்கள் பயணிப்பர். தங்கள் நகரம் / பிராந்தியத்தைச் சேர்ந்த சில விண்ணப்பங்களைச் சொந்தமாக்கிக் கொள்வதுடன் சமூக ஊடகங்களிலும் அவற்றை விளம்பரப்படுத்துவர்.


100 விண்ணப்பங்களில் 3 விண்ணப்பங்கள் குறைப்பட்டியலிடப்படும். பின்னர் அவை ஸ்ம்யூல் மிர்ச்சி கவர் ஸ்டார் தமிழ் போட்டியின் 3 இறுதி சுற்றாளர்கள் என்று பெயரிடப்படுவர். இந்த 3 வெற்றியாளர்களும் ஊடகம், ரசிகர்கள், நடுவர்கள் ஆகியோர் முன்னிலையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவர். இறுதியில் ஒரேயொரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு மிர்ச்சி மியூசிக் விருதுகள் தமிழ் 2019 நிகழ்ச்சியில் நேரலையாகப் பாடுவார், என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


#madurai #radio mirchi #cover #star