Primary Menu

Top Menu

July 19, 18

மதுரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!

பிளாஸ்டிக் இல்லா சுற்று சூழலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியை தொடங்கி வைத்தார் , வீரராகவ ராவ்.

மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் இல்லா சுற்று சூழலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை உருவாக்க வேண்டும்  விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்தும் பேரணியை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் சேது பொறியியல் கல்லூரி தாளாளர் முகமது ஜலீல் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியில்   கல்லூரி மாணவ மாணவிகள் 1000 க்கும் மேற்ப்பட்டோர் பிளாஸ்டிக் இல்லா நாட்டை உருவாக்குவோம், பிளாஸ்டிககை ஒழிப்போம் போன்ற வாசகங்கள் எழுதிய பலகைகளை  எழ்ந்தி  கலந்துக் கொண்டனர், இந்நிகழ்ச்சியில்   சேது பொறியியல் கல்லூரியின் முதல்வர், ஆசிரியர் ஆசிரியைகள், கல்லூரி அலுவலர்கள், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி தங்கவேல், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் தொடங்கி அன்னா நகர், K.K நகர், வழியாக காந்தி மியூசியம் வரை பேரணியாக சென்றனர். .

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், 1.1.19 முதல் பிளாஸ்டிக் இல்லா நாட்டை உருவாக்குவோம் என்று உறுதி மொழி எடுத்துள்ளார். அதன் முன்னெச்சரிக்கையாக அரசு அலுவலகங்களில் 2.7.18 முதல் பிளாஸ்டிக் தடை செய்யபட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபடுகிறது. மேலும் மதுரை மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்க பொதுமக்கள் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.

 

 

டோல்கேட் தடுப்புகளை கையால் உடைத்து சென்ற எம் எல் ஏ!!

டோல்கேட் பணியாளர்கள் தாமதப்படுத்தியதால்...

Leave a Reply