Primary Menu

Top Menu

September 25, 18

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிபத்து : கலெக்டர் மீண்டும் ஆய்வு , ஜோதிடர்கள் எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோவில் மாடத்தில் இருந்த நூற்றுக்கணக்கான புறாக்கள் செத்து மடிந்துள்ளன. மதுரை ஆட்சியர் வீர ராகவ ராவ் தடயவியல் நிபுணர்களுடன் மீண்டும் ஆய்வு நடத்தினார்.

விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் வைக்க போராடினர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. தகவலறிந்த ஆட்சியர் வீர ராகவ ராவ் கோயிலுக்கு சென்று நள்ளிரவில் ஆய்வு நடத்தினார். அப்போது மின் கசிவு காரணமாக தீவிபத்து நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில் தீ முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் கோயிலுக்கு எந்த ஆபத்தும் இல்லை.எனவே பக்தர்கள் வழக்கம் போல் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தலாம். கிழக்கு கோபுர வாசல் மட்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படும் என்றார். இந்நிலையில் இந்த கோயிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து அறிய ஆட்சியர் வீர ராகவ ராவ் மீண்டும் ஆய்வு நடத்தினார். அவருடன் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தினர்.

தீத்தடுப்பு கருவிகள் இல்லை

இதுகுறித்து ஜோதிட வல்லுநர்கள் கூறுகையில், ஆலயத்தில் ஏற்படும் தோஷங்கள், பூஜ முறைகள், தீட்டு தணிக்கைகள், ஆட்சியில் ஏற்படும் தவறுகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமே அக்னி என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இதனால் மன்னருக்கும், மக்களுக்கும், பூசாரிகளுக்கும் ஆபத்து என்பதை எச்சரிக்கும் விதமாக இந்த தீவிபத்து நடந்துள்ளது. கடுங்கோபத்தில் உள்ள மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் சாந்திப்படுத்த அக்னி சாந்தி பூஜைகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நிர்வாகத்தினர் ஆலோசனை

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon