Primary Menu

Top Menu

September 20, 18

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்

தமிழகம் எனது வீடு , கனத்த இயத்துடன் விடை பெறுகின்றேன் என உயர்நீதிமன்ற தலைமை

நீதிபதி இந்திரா பானர்ஜி உருக்கமான பேச்சு :

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 14 ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மதுரை பார் அசோசியேஷன் சார்பில் சங்க நிறுவன தலைவர் , மறைந்த வழக்கறிஞர் வெள்ளைச்சாமி நூலக அறையினை சென்னை உயர் நீதிமன்றதலைமை  நீதிபதி இந்திரா பானர்ஜி திறந்து வைத்தார். மேலும் மின்னணு நூலகத்தையும் தலைமை நீதிபதி துவக்கி வைத்தார்.

திறப்பு விழாவில் நீதிபதிகள் சி.டி.செல்வம், குலுவாடி ரமேஷ், எம்.வி. முரளிதரன்,எம்.எஸ்.ரமேஷ், நிஷாபானு, எஸ்.எஸ்.சுந்தர், சுரேஷ்குமார், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய தலைமை நீதிபதி தமிழகம் எனது வீடு போன்றது , கனத்த இயத்துடன் விடைபெறுகின்றேன் . நான் எங்கு சென்றாலும் தமிழகம் எனது நினைவில் இருக்கும். உயர்நீதிமன்ற மதுரையில் தான் பெரும்பாலான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி நியமனத்தில் மதுரை வழக்கறிஞர்களை நீதிபதிகளாக கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் .

நீதிபதிகள் மட்டும் தீர்ப்பு வழங்கிவிட முடியாது . வழக்கறிஞர்களின் சிறந்த வாதங்கள் ,  தீர்ப்பிற்கு முக்கிய உதவியாக இருக்கும்.  எந்த அளவுக்கு நீதிமன்ற தீர்ப்பு தரமாக உள்ளதோ ,  அந்த அளவுக்கு வழக்கறிஞர்களின் தரமாக இருக்க வேண்டும் .

உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இந்தியாவிலேயே முதன் முறையாக சித்த மருத்துவ பிரிவு துவங்கப்பட்டது .

இது தற்போது வாரத்தில் 3 நாட்கள் மட்டும் தான் இயங்குகிறது . அனைத்து வேலை  நாட்களிலும் இயங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் . விரைவில் இது குறித்து உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் .

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon