Primary Menu

Top Menu

September 20, 18

மதுரையில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்

மதுரை தல்லாகுளம் முதன்மை கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பாக 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட தலைவர் சோமு சிவகங்கை, தேனி, விருதுநகர் மாவட்ட தலைவர்கள் தலைமையில் தென் மாவட்டங்களிலிருந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ST FI  அகில இந்திய பொது குழு உறுப்பினர் இசக்கியப்பன் அரசு, அரசு உதவிபெறும் நகர, மாநகர உயர் நிலை, மேல்நிலை பள்ளி இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளையாவும், ஊதிய குழுவின் 21 மாத நிலுவை தொகைகளை வழங்க, அரசாணை எண் 100 & 101 மூலம் அரசு பள்ளிகள் மூடுவதை ரத்து செய்யவும், அரசாணை 56 ன் படி பணியாளர் பகுப்பாய்வு குழு வினை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஆகஸ்ட் 11ல் பெருந்திரள் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.
Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon