Primary Menu

Top Menu

September 24, 18

குடிபோதையில் குழந்தையை கொடுமை செய்யும் தந்தை

மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதி காமராசர் 1வது தெருவில் கடந்த 5 மாதங்களாக சசி – கெளரி என்கிற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு 4 வயதில் யோகா என்ற மகள் உள்ளார், சசி – கெளரி இருவரும் ஆடல் – பாடல் நிகழ்ச்சியில் பங்குபெறும் மேடை கலைஞர்கள், காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டால் நள்ளிரவில் தான் வீடு திரும்புவார்கள் என கூறப்படுகின்றது.

4 வயது சிறுமி யோகாவை அக்கம் பக்கத்தினர் தான் யோகாவிற்க்கு தேவையான உணவினை வழங்கி பார்த்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் யோகா வீட்டின் அருகில் வசிப்பவர் யோகா உடலில் இருந்த காயங்களை பார்த்து யோகாவிடம் கேட்ட போது தந்தை சசி இரவு நேரங்களில் குடி போதையில் தன்னை கடித்து வைப்பதாகவும், ஊசியை கொண்டு குத்துவதாகவும், சிகரெட்டை வைத்து சூடு வைப்பதற்காகவும் கூறி உள்ளார், இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர், அகில இந்திய மாதர் சங்கத்தின் புகாரின் பேரில் கரிமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

புதுச்சேரியில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் அறிமுகம்

புதியதாக அறிமுகப்படுத்துள்ள ஆயுஷ்மான்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon