IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காருக்குள் நிர்வாணமாக கிடந்த காதல் ஜோடியினர் – அதிர்ச்சியில் பின்னணி தகவல்

290

காருக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த காதல் ஜோடியினரை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி கோபியின் மகன் சுரேஷ். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கல்லூரி முடித்து விட்டு வீடு திரும்பாததால், மகனை அக்கம் முழுவதும் தேடிவிட்டு கிடைக்காததால் போலீசாரிடம் சென்று புகார் மனு கொடுக்க சென்றுள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அதன்படி சுரேஷிற்கு சொந்தமான கார்ஷெட் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சுரேஷ் மற்றும் ஒரு இளம்பெண்ணின் சடலம் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட இளம்பெண் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி ரவியின் மகள் ஜோதிகா என விசாரணையில் தெரியவந்தது.

இரு குடும்பத்தினராறிடம் விசாரித்ததில் சுரேஷ் – ஜோதிகா இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாகவும், அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரியவந்தது.

இந்நிலையில் இந்த காதல் ஜோடிகள் பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்றால் எதற்காக ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக இருக்க வேண்டும். அல்லது இருவரும் உல்லாசமாக இருந்தபோது மூச்சடைந்து இறந்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இவர்களது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனையின் முடிவின் படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.