Primary Menu

Top Menu

September 23, 18

காதல் கல்யாணம் பிரச்சனைகளுக்கு உதவும் ஆப்

தமிழகத்தை சேர்ந்த வாசுமதி வசந்தி என்பவர், கௌரவக்கொலைகளை கட்டுப்படுத்தவும் காதல் தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவி செய்வதறகாகவும் , ‘காதல் அரண்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கடந்த 2016, மார்ச் மாதம் தமிழகத்தையே உலுக்கிய சம்பவமாக சங்கரின் ஆணவக்கொலை இருந்தது. தமிழகத்தினை, சாதி இல்லா சமூகமாக மாற்ற சில தலைவர்கள் முயற்சித்தாலும், ஆணவக்கொலை மற்றும் கௌரவக்கொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். 2014 முதல் முன்னூறுக்கும் அதிகமான ஆணவக்கொலைகள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.


எனவே, இதுபோன்ற அநீதியான கொலைகளை கட்டுப்படுத்த ‘காதல் அரண்’ என்ற செயலி உருவாக்கப்பட்டது. ஆணவக்கொலைகளை தடுப்பதற்கு மட்டுமல்லாமல், கட்டாயத்திருமணம், காதல் திருமணம் புரிந்துகொண்டவர்களை பெற்றோர் அச்சுருத்தல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு உதவும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

காதல் அரண் மூலம் உதவியை நாடுபவர்கள், அவர்களது தொலைபேசி எண்ணோடு, அவர்கள் பற்றிய தகவல்களை பதிவு செய்யவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், அந்த பகுதியில் உள்ள உதவியாளர்கள் அவர்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்குத்தேவையான வகையில், காவல்துறையின் உதவி, வழக்கறிஞர்களின் உதவி செய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று வாசுமதி வசந்தி தெரிவித்தார்.

இந்த செயலி, கடந்த வருடம் காதலர் தினத்தன்று, கௌரவக்கொலையால் பாதிக்கப்பட்ட கௌசல்யாவால் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும், போதுமான அளவில் உதவியாளர்கள் இல்லாததால், சரியாக இயங்கவில்லை . ஆதலால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உதவியாளர்களை சேர்த்துக்கொண்டு  இந்த மாதம், காதல் அரண் செயலியை மீண்டும் அறிமுகப்படுத்தப்போவதாக வாசுமதி வசந்தி தெரிவித்துள்ளார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon