IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

6


தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


#Local Election #Voter List #Publication