Primary Menu

Top Menu

August 16, 18

Live Updates : ஆபத்தான கட்டத்தில் கருணாநிதி

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த பத்து நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இதை தொடர்ந்து, காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.

 

மேலும் கடந்த மாதம் 27 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது.

 

இன்று மாலை மாலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில் முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

 

அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்பு தான் எந்த முடிவையும் சொல்ல முடியும். தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

 

கருணாநிதியின் உடல்நிலை மேலும் பின்னடைவு அடைந்ததால் மருத்துவமனையை விட்டு வெளியேறினார் ஸ்டாலின்.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon