IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் அந்த இடத்தில் மட்டும் எப்படி துளையிட்டு கொள்ளையடிக்க முடிந்தது ? திடுக்கிடும் தகவல் – வீடியோ இணைப்பு

4


லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பயன்படுத்திய விதம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.


திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளன. இந்தக் கடையின் பின்புறம் புனித ஜோசப் கல்லூரி வளாகம் உள்ளது. இந்த நகைக்கடையின் பின்புறம் தான் கொள்ளையர்கள் சுவரை துளையிட்டு பின்புறமாக உள்ளே நுழைந்து துணிகரமாக நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.


ஆனால் இந்த கொள்ளையில் திடுக்கிடும் தகவல் என்னவென்றால் கடையின் பின்புறம் சுவரை துளையிட்டு திருடியுள்ளதுதான். அந்த சுவற்றிற்கு அருகில்தான் கடை உள்ளே வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் இடம் உள்ளது. மற்றொரு தகவல் கடையின் அனைத்து இடங்களிலும் கடையை சுற்றி கேமராக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.


ஆனால் கடையின் பின்புறம் சுவரை துளையிட்ட இடத்தில் மட்டும் தான் கேமராவின் பதிவு மிகக்குறைவாக இருப்பதால் கொள்ளையர்கள் அந்த இடத்தை பயன்படுத்தியுள்ளதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர். மற்ற எந்த இடத்திலும் சுவரை துளையிட்டு உள்ளே நுழைய முயற்சி செய்திருந்தாலும் வசமாக சிக்கியிருப்பார்கள் என தகவல் அளித்துள்ளனர்.


இந்த சம்பவத்தை முன்னிட்டு கடையில் உள்ள அனைத்து பணியாளர்களையும் போலீசார் விசாரித்துள்ளனர். இந்த விசாரணை இன்றும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடையில் பணிபுரியும் வேலை ஆட்களோ அல்லது கடையிலிருந்து விலகிய பணியாளர் யாரோ கொடுத்த தகவலின் படிதான் இந்த துணிகர கொள்ளை நடந்திருக்க முடியும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


மேலும் 30 கிலோ நகையை இரண்டு பேரால் மட்டும் எடுத்துச் சென்றிருக்க முடியாது. இந்த கொள்ளைக்கு மேலும் பலர் ஈடுபட்டிருக்க முடியும் என போலீசார் சந்தேகித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.