IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பாவம்யா அந்த லலிதா ஓணர்! விஷத்தைக் கக்கும் சமூகவலைதள போராளிகளுக்கு ஓர் வேண்டுகோள்!

5


நேற்று திருச்சியில் நடந்த லலிதா ஜுவல்லரி, கொள்ளையை அடுத்து, அதன் உரிமையாளரை கேலி, கிண்டல் செய்தும், அவருக்கு கொள்ளையில் உள்நோக்கம் இருப்பதாக கற்பித்தும், பல பதிவுகளை விஷ கிருமிகள் முகநூலில் பரவச்செய்வதை காண முடிகிறது.


லலிதா ஜுவல்லரியின் வளர்ச்சி 1983 இல் தொடங்கி இன்று தென் இந்தியாவில் 18 கிளைகளுடன் வளர்ந்திருக்கிறது. அதன் உரிமையாளர் திரு, கிரன் குமார் மிக நார்மலான மனிதர், கடுமையான உழைப்பாளி. உயரம் சென்றவர்கள் அனைவரும் அந்த உயரத்தை தக்க வைத்துக் கொள்ள அவர்கள் கொடுக்கின்ற விலையும் , உழைப்பும் மிக அதிகம்…


ஒரு நிறுவனம் வளரும் பொழுது, அது வழங்குகின்ற, நேரடியான, மறைமுகமான வேலை வாய்ப்பு, அவை நாட்டுக்கு ஈட்டித் தரும் வருவாய், அதனை சார்ந்த நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி, அவர்கள் அரசுக்கு செலுத்தும் நேர்முக மற்றும் மறைமுக வரிகள், இவற்றையெல்லாம் நாம் மறந்து, இந்த சோதனை வேளையில் அந்த நிறுவனரை கேலியும், கிண்டலும் செய்கிறோம்…இது முறையா? சரியா?


வட இந்தியாவில் இருந்து, இங்கே பிழைக்க வந்தவர்கள், நம் மண், பொன் அனைத்தையும் கொள்ளையடித்து செல்கிறார்கள். நாமோ மதுவிலும், சினிமா மோகத்திலும் மூழ்கி நம் எதிர்கால வாழ்வையே தொலைத்து நிர்கதியாய் நிற்கிறோம்.


மனசாட்சியோடு விமர்சனங்களை பதிவிடுங்கள்…..
கொஞ்சம் கொஞ்சமாக பெரும் நிறுவனங்கள், நமது தமிழக அரசின் மெத்தனத்தாலும், பெருகி வரும் கொலை, கொள்ளையாலும் தமிழகத்தை விட்டு ஓடிக் கொண்டு இருக்கின்றனர். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், தொழிலை பெருக்கி ஒரு நிறுவனத்தையும் வளர்ப்பதும் எவ்வளவு கஷ்டமென்று, இலவசங்களிலேயே வாழ்ந்து பழகிவிட்ட தமிழனுக்கு எப்படி உரைக்கும்?
லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் மட்டும் எப்படி துளையிட்டு கொள்ளையடிக்க முடிந்தது ?


லலிதா ஜுவல்லரியின் திருச்சி ஊழியர்கள் இன்றைய நிலையில் கடுமையான மன அழுத்தத்திற்கும், போலீஸ் கெடுபிடிகளுக்கும் உள்ளாகி சோதனையான காலத்தை கடந்து வருகின்றனர். ஆதரவாக ஆறுதல் சொல்லவில்லை என்றாலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் இருப்போமே..


அவர் வெளியிடும் விளம்பரங்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் வாங்குங்கள் இல்லையேல் விடுங்கள். இதனை ஒரு நடிகையோ நடிகரோ செய்யும்போது அவரே வாங்கியது போல் நாமும் வாங்குகிறோம்.


தொழிலில் போட்டி பொறாமை போன்ற விடயங்களை கடந்து வளர்ந்து அவர்கள் நிற்பது கடினம். எப்பொழுதும் நமக்கு வெளிநாட்டு மொழி மோகம் தான்.


திருச்சி ஊழியர்களை நைய்யப்புடைத்து விடும் காவல் துறை உண்மை அறிய..


நாம் அவர்களுக்கு ஆறுதலாக இருப்போமேயானால் அந்த மாதிரி மீம்ஸ் வரும்போது டவுன்லோட் செய்யாமலும் பார்வேர்டு செய்யாமலும் இருந்தாலே போதும்.


சென்னையில் பிரபல ஜவுளிக்கடை எரிந்த போது அனைத்து போட்டி நண்பர்களும் தங்கள் பங்கிற்கு இரவு காவல் இருந்தனர் அது அவர்கள் ஒற்றுமையைக் காட்டுகிறது. நாம் நமது அனுதாபத்தையாவது அவர்களுக்கு தெரிவிப்போம்…


கிண்டல் வேண்டாமே நாமே கேலிக்கு ஆளாவோம்..

கிரன் சார் நாங்கள் உங்களுடன்…


விரைவில் உங்கள் நகைகள் வந்து சேர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்… அந்த மலைக்கோட்டை விநாயகர், தாயுமானவர் துணையிருப்பர்.