Primary Menu

Top Menu

June 24, 18

குரங்கணி காட்டு தீ : விதிகளை மீறி வந்த மாணவிகள்

குரங்கணி மலையில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என தேனி மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தெரிவித்தார்.

மலையேறும் பயிற்சிக்கு அழைத்துச் சென்றவர்கள் விதிகளை மீறி தமிழக வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுவே மாணவிகள் உயிரிழக்கவும், காயமடையவும் காரணமாகியுள்ளது.

நேற்றைய தினம் மலையேற்றப் பயிற்சிக்கு வந்தவர்கள் மாணவிகள் வனத்துறை அனுமதியின்றி மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்கள் கேரளா வழியாக குரங்கணிக்கு இறங்கி வரும் போது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். இதுவே அசம்பாவிதம் நடக்க முக்கிய காரணமாக உள்ளது.

கோடை வெயில் காரணமாக, போடிமெட்டு அருகே அகமலை, மராக்காமலை, குரங்கணி பகுதிகளில் உள்ள காடுகளில் கடந்த 20 நாட்களாக இரவு, பகலாக காட்டுத்தீ பரவி வந்தது. திடீரென்று நேற்று பிற்பகலில் பற்றிய தீ காற்றின் தீவிரத்தால் அதிகமாக பரவியுள்ளது. தீ பரவியதை பார்த்ததும் பதற்றத்தில் ஓடியவர்களே கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர். மலையிடுக்குகளில் சிக்கி பாதுகாப்பாக இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறு காயங்களுடன் தப்பிவிட்டனர் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்

கைலாஷ் மானசாரோவர் யாத்திரை செல்வதற்காக...

Leave a Reply