Primary Menu

Top Menu

May 28, 18

காட்டுத் தீயில் சிக்கியவர்கள் மதுரை ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை

குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். காயம் அடைந்த 9 பேர் கவலைக்கிடமான நிலையில் மதுரை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில் சென்னை வேளச்சேரியைச்சேர்ந்த நிஷா (வயது20) நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகங்களில் கண்ணீருடன் சோகமே உருவான நிலையில் அமர்ந்துள்ளனர். அவ்வப்போது மருத்துவக் குழுவினரிடம் உடல்நிலை குறித்து விசாரித்தப்படி கண்கலங்கி அமர்ந்திருக்கும் காட்சி பரிதாபமாக உள்ளது.

 

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தொடர் மின்னல்களால் பயணிகள் கடும் அவதி

இங்கிலாந்து நாட்டில் கடந்த சில தினங்களாக...

1 Comment

  1. குரங்கணி வனதேவதைகளுக்கு அஞ்சலி
    – வ.ஐ.ச.ஜெயபாலன்

    .
    மாடு தழுவி மாளாது தினவு என
    யானை தழுவ மழைக்காடு சென்றவரே
    மழைக்காடுட்டில் இளைய தமிழகத்தை வரவேற்க
    ஆர்வக்கோளாற்றால் இறங்கிவந்த சூரியனே
    நீர் சிந்த வானூர்தி வாராத தேசத்தில்
    கண்ணீரால் தீயணைக்கும் கடல் சூழ்ந்த தமிழ் நாடே
    பெருந்தீயில் பட்ட எங்கள் குலதெய்வ நடுகல்லாய்
    குரங்கணியை காக்கச் சூழுரைக்கும் இளையவரே
    மேலை மலர்தொடர் வாழ்ந்தால் என்களது கண்மணிகள்
    காலமெல்லாம் வாழ்வர்
    மலராக வண்டாக பறவைகளாய் விலங்குகளாய்
    புல்லாய் வனங்களாய் பொய்கைகளில் மீனினமாய்
    வனதேவதைகளாய்
    பல்லாண்டு பல்லாண்டாய் வாழிய நம் கண்மணிகள்.

Leave a Reply