Primary Menu

Top Menu

August 18, 18

நெற்றியில் குங்குமம் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்!

இறைவனுக்கு பிடித்த நிறம் சிகப்பு. அம்பிகைக்கு உகந்த நிறம் கருப்பு என்கிறது.  சிவபுராணம். தீய சக்திகளை அழிக்கும் ஆற்றலை சிகப்பு நிறத்திற்கு கொடுத்து இருக்கிறார் .சிவபெருமான். நெற்றியில் குங்குமத்தை வைத்துகொண்டால் எந்த தீயசக்தியும் நெருங்காது. உடலில் எங்காவது ரத்தம் அடைப்பட்டு இருந்தால் அந்த இடத்தில் ரத்தம் சீராக பாய சிகப்பு ஒலியை வெளிப்படுத்தும் மின்சார விளக்கை ரத்தம் தடைபட்ட இடத்தில் காட்டுவார்கள். இதனால் அந்த இடத்தில் ரத்தஒட்டம் சரியான நிலைக்கு வரும் என்கிறது விஞ்ஞான மருத்துவம்.

இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வது மங்கள மானதாக கருதப்படுகிறது. அது அழகுத் தொடர் பானதும் கூட. மஞ்சளால் உருவாக்கப்பட்ட தூய்மையான குங்குமத் தை தான் வைத்துக்கொள்ள வேண்டும். குங்குமத்தை கழுத்தில் உள்ள கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, நெற்றியின் உச்சி போன்ற இடங்களில் வைத்துக் கொள்வார்கள். அப்படி பொட்டு வைப்பதற்கு பல காரண ங்கள் உள்ளன.

மூளைக்கு சுறுசுறுப்பு தரும் ஆற்றல் குங்குமத்திற்கு இருக்கிறது. அதனால்தான் நெற்றியில் குங்குமத்தை கண்டிப்பாக ஆண்களும் சரி பெண்களும் சரி இட்டுக்கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தினார்கள். குங்குமம் வைத்துக்கொள்ள கூச்சப்படும் ஆண்களும் கோயிலில் பிரசாதமாக குங்குமம் தரப்படும்போது அதனை மறுக்காமல் தங்கள் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். காரணம் குங்குமத்திற்கு இருக்கிற மிக முக்கியமான மகிமை என்னவென்றால், நல்லது எது? – தீயது எது என்று சிந்தித்து பார்க்கும் ஆற்றலை தருகிறது குங்குமம். குங்குமத்தை நெற்றியில் வைத்திருப்பவர்களை கண்டால், துஷ்ட எண்ணம், பிறருக்கு கெடுதல் செய்யும் எண்ணம் உள்ளவர்களை அச்சுறுத்தும்.

வசியத்தில் இருந்து தப்பலாம்:

மாந்தீரிகத்தில் கூட சித்து வேலை செய்து பிறரை வசியப்படுத்துகிறவர்கள் தங்கள் நெற்றியில் திருநீறு – குங்குமத்தை வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதுபோல நெற்றியில் திருநீறு – குங்குமத்தை வைத்துக்கொண்டிருப்பவர்களை தீய எண்ணம் கொண்ட சித்து வேலைகாரர்கள் – மாந்தீரிகர்கள் – மெஸ்மரிசம் செய்பவர்கள் வசியப்படுத்த முடியாது.

உஷ்ணத்தை கட்டுபடுத்தும் குங்குமம் :

ஒருவர் பேசியதையே திரும்ப திரும்ப பேசினால் என்ன சொல்வோம்? அவருக்கு மூளை குழம்பிவிட்டது… அதனால்தான் அப்படி திரும்ப திரும்ப பேசுகிறார் என்று கூறுவோம் அல்லவா? இப்படி மூளை குழம்புவதற்கு காரணம் அதிக மன உலைச்சல். அந்த மனஉலைச்சல்தான் மூளைக்கு உஷ்ண தன்மையை கொடுத்து விடுகிறது. அதனால் பாதிக்கப்ட்டவர்கள் மனம் போன போக்கில் பேசுவார்கள்.

மூளைக்கு செல்லும் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் குங்குமத்திற்கு இருக்கிறது. குங்குமத்தை மஞ்சல் – படிகாரம் போன்ற பொருட்களால் தயாரிக்கிறார்கள். படிகாரம் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும். மன இருக்கத்தை தடுக்கும். அதனால்தான் நெற்றியில் குங்குமத்தை வைக்க வேண்டும். சூரியனின் ஒலி உடலில் படும்போது அந்த ஒலி நெற்றிலும் படும். அப்படிபடும் சூரிய கதிரால், நெற்றியில் இருக்கும் குங்குமத்தின் சிகப்பு ஒலி மூளைக்கு சென்று மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

துஷ்டசக்தியை போக்கும் குங்குமம் :

சிலர் ஆடு – கோழிகளை பலி கொடுப்பார்கள். காரணம் ரத்த காவு வாங்க காத்திருக்கும் துஷ்ட சக்திகள், பலி தரப்படும் ஆடு-கோழிகளின் ரத்தம் குடித்து திருப்தி அடைந்து அந்த இடத்தைவிட்டு சென்றுவிடும். ஆனால் இப்படி உயிர் பலி தருவதை எதிர்த்தார் ஆதிசங்கரர். உயிர் பலி தருவது பாவம் சேர்க்கும் என்றார். அதனால் ஒரளவு உயிர் பலி தருவது குறைந்தது. இருந்தாலும் துஷ்ட சக்திகள் நம் வீட்டினுள் நுழையாமல் இருக்கவும், கண் திருஷ்டி போன்றவை தாக்காமல் இருக்கவும், உயிர் பலிக்கு ஒரு மாற்றாக எழுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அந்த எழுமிச்சையின் இரண்டு பகுதியிலும் குங்குமத்தை தடவி, அந்த எழுமிச்சை பழத்தை வீட்டின் தலைவாசலின் அருகில் வைத்தால், அந்த இல்லத்திற்குள் துஷ்டசக்திகள் நுழையாது – கண் திருஷ்டியும் தடுக்கப்படும்.

வீட்டின் தலைவாசலில் அவரவர் குல வழக்கத்தின்படி மஞ்சல் குங்குமத்தை வைத்தால், அந்த இல்லத்தை தீயசக்திகள் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மி அந்த இல்லத்தில் வாசம் செய்வாள். அத்துடன் குலதெய்வம் அந்த இல்லத்தில் தங்கி, அருள் செய்யும். நலம் தரும். சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கும்.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon