Primary Menu

Top Menu

May 21, 18

கோலமாவு கோகிலா படத்தின் சிங்கிள் ட்ராக் இதோ

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் ‘கோலமாவு கோகிலா’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் சிங்கள் ட்ராக் வெளியாகியுள்ளது.  இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். மேலும், இப்படத்தில் நயன்தாரா போதை பொருள் விற்பவராக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ‘கோலமாவு’ என்பது போதைப் பொருளுக்கான மறைமுகப் பெயர்.

மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாராவுக்கு ஏற்படும் திடீர் சிக்கலைத் தீர்க்க நிறைய பணம் தேவைப்படுகிறது. அதற்காக போதைப்பொருள் விற்கும் தொழிலைச் செய்கிறார். போதைப் பொருளை பேக்கில் வைத்து யாருக்கும் சந்தேகம் வராதபடி விற்கிறார். போதைப் பொருள் விற்கு மிடில் கிளாஸ் குடும்பத்து பெண் சந்திக்கும் பிரச்னைகளை காமெடி, சென்டிமென்ட் கலந்து கமர்ஷியலாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தன்னை பற்றிய கிசுகிசுக்குகள் குறித்து நடிகை அமலாபால்

தன்னை பற்றி எந்தவித கிசுகிசுக்குக்கள்...

Leave a Reply