Primary Menu

Top Menu

September 25, 18

கேரளா: வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 324ஆக உயர்வு

கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என்று, எதையுமே விட்டு வைக்காமல் வெள்ளம் சூழ்ந்து உள்ளது
யாராவது வெள்ளத்தில் சிக்கிய நம்மை காக்க வரமாட்டார்களா என்று ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் ஏங்கி தவிக்கின்றனர்.கேரளாவில் உள்ள 39 அணைகளில் 35 அணைகளுக்கும் மேல் முழுக்கொள்ளவை எட்டி, அபாயகரமான அளவிற்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் தங்கள் வீடு, உடமை அனைத்தையும் இழந்துள்ளனர். சில இடங்களில் மக்கள் தங்கள் உறவுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.
மலைப்பாங்கான பகுதியில் உள்ள வீடுகள் நிலச்சரிவினால் இடிந்து, தினம் தினம் உயிர்பலி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பல இடங்களில் சாலை முற்றிலுமாக துண்டிகப்பட்டு உணவுக்கு கூட தள்ளாடி வருகின்றனர்.
இந்து குறித்து கேரள முதல்-மந்திரி பினரயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது;-
100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரள மாநிலம் கடுமையான வெள்ளத்தை சந்தித்துள்ளது. கேரள மாநிலத்திலுள்ள 80 அணைகளும் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.  1,500க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில்  2, 23, 139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உங்கள் உதவி பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் உருவாக்க முடியும்.
Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon