Primary Menu

Top Menu

September 26, 18

கேரளாவிற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார் விஜய் சேதுபதி

வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்ட பல மாநிலங்களும் முன்வந்துள்ளன. தமிழக முதல்வர் பழனிசாமி 5 கோடியும். புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி ஒரு கோடி ரூபாய் நிதியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஷால் வெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். கேரள முதல்வரின் வெள்ள நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். மேலும் இணையத்தில் வழியே தங்களால் முடிந்த நிதியுதவியினை வழங்க கோரி கேரள முதல்வர் அனைத்து விவரங்களையும் குறிப்பிட்ட பதிவினை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

 

 

இன்று அவரை போல் விஜய் சேதுபதி, ரூ 25 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

கடந்த 9 நாட்களில், கேரளாவில் 164 பேர் உயிர் இழந்துள்ளனர். 2.25 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments

தேவர் மகன்–2 படத்தை இயக்க கமல்ஹாசன் முடிவு?

நடிகர் கமல்ஹாசனும் தேவர் மகன் படத்தின்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon