Primary Menu

Top Menu

September 25, 18

கேரளா மீட்பு பணி : மொட்டை மாடியில் தாங்க்ஸ் புகைப்படம் வைரல்

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரளாவில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நன்றி கூறும் விதமாக மொட்டை மாடியில் தாங்க்ஸ் என்று எழுதப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதந்து வரும் நிலையில் ஆங்காங்கே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவத்தினர் நிலத்திலும், கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலமாகவும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடற்படையின் செய்திதொடர்பாளரின் ட்விட்டரில் ஒரு புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாடி ஒன்றில் தாங்க்ஸ் என்று எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள கடற்படை செய்திதொடர்பாளர், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வீட்டிலிருந்த இரண்டு பெண்களை கமெண்டர் விஜய் வர்மா ஹெலிகாப்டரில் காப்பாற்றியதாகவும், அதற்கு நன்றி தெரிவித்து அந்த வீட்டில் இருப்பவர்கள் இவ்வாறு எழுதி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon