Primary Menu

Top Menu

September 25, 18

வெள்ள மீட்பு பணியில் படிக்கட்டாக மாறிய மீனவருக்கு 1 லட்சம் வழங்கிய இயக்குனர்

கேரள வெள்ளத்தின் போது மண்டியிட்டு படகில் ஏற பெண்களுக்கு உதவிய ஜெய்சாலுக்கு, திரைப்பட இயக்குனர் வினயன் 1,00,000 ரூபாய் பரிசாக வழங்கியுள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், 13 மாவட்டங்களும் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த 4 நாட்களுக்கு முன் கேரள மீனவர் ஜெய்சால் தன்னார்வல மீட்புக்குழுவுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டார்.  அப்போது பெண்களும் குழந்தைகளும் போட்டில் ஏற தடுமாறினர். உடனே மீனவர் ஜெய்சால் சற்றும் யோசிக்காமல் அவர்களுக்கு உதவும் வகையில் தனது முதுகை படிக்காட்டாக மாற்றி அதில் ஏறுவதற்கு உதவினார்.

மீனவர் ஜெய்சால் உடலை வருத்தி பல உயிர்களை காப்பாற்றிய ஜெய்சாலுக்கு  பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று அவரை சந்தித்த பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் வினயன் ஒரு லட்சம் ரூபாய் வழங்கி மீனவர் ஜெய்சாலை பாராட்டினார்.

 

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon