Primary Menu

Top Menu

September 22, 18

கலைஞர் மறைவு : நாளை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து சிறிது நேரத்தில் அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து சி.ஐ.டி. நகரில் உள்ள இல்லத்துக்கும் கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்பட்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். இதையடுத்து நாளை காலை 11.00 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் இறுதி நிகழ்வில் பங்கேற்க, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாளை சென்னை வருகிறார்கள்

கதறி அழும் தொண்டர்கள் :

கருணாநிதி மறைந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து, காவேரி மருத்துவமனை மற்றும் கோபாலபுரம் கலைஞர் இல்லத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் கதறி அழுதனர். இந்த அறிவிப்பையடுத்து கோபாலபுரம் கலைஞர்கள் இல்லத்தில் தொண்டர்கள் பெருமளவில் திரளத்துவங்க, வழியெங்கும் பேரிகார்ட்களை அமைத்து போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

7 நாள் துக்கம் அனுசரிப்பு. நாளை அரசு விடுமுறை :

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவையடுத்து, தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் இரங்கல் :

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், கருணாநிதி மறைவுக்கு அவர் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். `கலைஞர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரின் குடும்பத்தாருக்கும் மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கலைஞர் மறைந்தார் :

80  ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கை; தொடர்ச்சியாக 13 முறை சட்டமன்ற உறுப்பினர்; 5 முறை தமிழக முதல்வர் எனப் பல சாதனைகளைப் படைத்த கருணாநிதி, 94 வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்து 95வது வயதில் இன்று மறைந்திருக்கிறார். இலக்கியம், சினிமா, அரசியல் எனப் பல்துறை வல்லமை கொண்ட தலைவர் எனக் கடந்த நூற்றாண்டில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக, மக்கள் மத்தியில் மாபெரும் சக்தி பெற்றத் தலைவராக வாழ்ந்து இன்று மறைந்திருக்கிறார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon