Primary Menu

Top Menu

September 22, 18

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்!

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், மனைவியுடன் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெறுவதற்காக மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றிருந்தார். இதனால் கருணாநிதியின் இறுதிச்சடங்கில் அவரால் பங்கேற்க முடியவில்லை.

அமெரிக்காவில் இருந்தபடியே கண்ணீர் விட்டு கதறியபடி கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர் விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும். இந்நிலையில் இன்று அதிகாலை அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்.

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷூடன் நேராக கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்றார். பின்னர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி அவர் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார்.

விஜயகாந்துக்கும் அவரது மனைவி பிரேமலதாவுக்கும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிதான் திருமணம் நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon