Primary Menu

Top Menu

September 26, 18

கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் அஞ்சலி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் ராஜாஜி அரங்கிற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

 

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். இதனை அடுத்து, பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

அதனைத்தொடர்ந்து கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கும், நள்ளிரவுக்கு பின்னர் சிஐடி காலனிக்கும் கொண்டு செல்லப்பட்டது.

 

அங்கு அவரது உடல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

 

அதன்பின்னர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கிற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

 

அதன்பின் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

 

அவருடன் லதா ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon