Primary Menu

Top Menu

August 16, 18

அண்ணா அணிவித்த மோதிரத்தை அணிந்தபடியே கருணாநிதி அடக்கம்

மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணா அணிவித்த மோதிரத்துடனேயே திமுக தலைவர் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட விவகாரம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1959ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு கருணாநிதியே காரணமாக இருந்தார். அந்த தேர்தலில் திமுகவிற்கு மேயர் பதவியே கிடைத்தது. இதற்கு காரணமாக இருந்த கருணாநிதிக்கு  அண்ணா ஒரு தங்க மோதிரத்தை அணிவித்தார்.
அதை பொக்கிஷமாக கருதிய கருணாநிதி அந்த மோதிரத்தை எப்போதும் கழட்டவே இல்லை. உடல் நலக்குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவர்கள் கூறியும் அந்த மோதிரத்தை அவர் கழட்டியது இல்லை.
அவரின் உயிரோடும், உணர்வோடும், உடம்போடும் ஒன்றாக கலந்து விட்ட அந்த மோதிரம் அவர் மரணமடைந்த பின்பும் கழட்டப்படவில்லை. அந்த மோதிரத்தை அணிந்தபடியே அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

அவரின் இழப்பு தமிழ்நாட்டிற்கே பெரிய சோகம். ரஜினி, கமல், அஜித் என நிறைய பிரபலங்கள் நேரில் வந்து தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

பொதுமக்கள், மூத்த தலைவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியப்பின் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தன்னால் நேரில் வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை, தான் உக்ரைனில் மாட்டிக் கொண்டேன் என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon