Primary Menu

Top Menu

October 21, 18

பூஜைகளின் போது கற்பூரம் தீபாரதனை காட்ட காரணம் ?

நமது இந்து மத சம்பிரதாயங்களில் கற்பூரத்திற்கு முக்கிய பங்கு உண்டு. பூஜைகளின் போது கற்பூரத்தை ஏன் ஏற்றுகிறோம். கற்பூரமாவது எரிக்கப்படும் போது  அது ஒளியாகி காற்றில் கரைந்துவிடுகிறது. அதன் மிச்சம் என்பதே இருக்காது. அது போல நாமும் நம்முடைய இப்பிறவியின் மிச்ச சொச்சம் இல்லாமல், இறைவனோடு இரண்டறக் கலக்கும் பக்குவநிலையை  அடைய வேண்டும்.

கற்பூரம் என்றால் கோவிலில் தீபாரதனை காண்பிக்க பயன்படுகிறது என அனைவரும் கருதுவர். சிலர் வீட்டில் இரவு தூங்குவதற்கு முன்னால் உடலில் தடவி வெளியில் கொண்டு எரிப்பார்கள். அதனால் நமக்கு ஏற்பட்ட கண் திருஷ்டி சரியாகும் என் நம்புவார்கள்.

Image result for karpooram pooja

ஆன்ம ஜோதியில் கற்பூரம் கரைவது போல, பரபிரம்மத்துடன் ஜீவன் கரைந்து இரண்டற கலக்கவேண்டும் என்ற உண்மையை உணரவே, கற்பூர  ஒளியை கையில் ஒற்றி கண்களில் வைத்துக்கொள்வது ஆகும். இதனால் நாம் நம்முடைய அஞ்ஞானத்தை போக்கி மெய்ஞானத்தை அடையலாம்.

கற்பூரத்துக்கும் நெய் தீபத்துக்கும் வேறுபாடு உண்டு. கற்பூரம் என்பது ஒரு விநோதமான ஹைட்ரோகார்பன் பொருள். இதை எரிக்கும்போது பதங்கமாதல் என்னும் முறையில் எரிகிறது. அதாவது அந்தப் பொருளை சூடு படுத்தும்போது திட நிலையில் இருந்து திரவ நிலைக்குச் செல்லாமல் நேரடியாக வாயு  நிலைக்குப் போய்விடும். இதே போல கற்பூரம் போல வெள்ளை உள்ளம், தூய உள்ளம் உடையோர், இடைப்பட்ட நிலைகளைக் கடந்து நேராக இறைவனிடத்தில் ஐக்கியமாகலாம் என்பதையும் கற்பூர ஆரத்தி நினைவுபடுத்துகிறது.
Related image
கற்பூரம் வெண்மையானது. அது போல ஆன்மா சுத்த தத்துவ குணமுள்ளது. கற்பூரம் ஏற்றியவுடன் அது தீபம் போல எரிகிறது.  அதே போல மலம் நீங்கப்பெற்ற  ஆன்மாவானது ஞானாக்கினியால் சிவகரணம் பெற்று நிற்கிறது. கற்பூரம் இறுதியில் ஒன்றுமின்றி கரைந்து போகிறது. அதே போல ஆன்மாவானது சரீரத்தை  விட்டு நீங்கி மறைந்து இறைவனோடு ஒன்றுபடுகிறது.

கற்பூரத்தின் நன்மைகள்:-

 • இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. வாயுவுத் தொல்லை மற்றும் வாயுவு பிரச்சனையால் வயிறு வீங்குதல் போன்றவை ஏற்படாமல் இருக்கிறது.
 • செரிமான உறுப்புகளை சீராக்கி செரிமானத்திற்கு உதவுகிறது.
 • சளித்தொல்லையில் இருந்து விடுபட கற்பூரம் பயன்படுகிறது.
 • நுரையீரலை சுத்தம் செய்து சுவாசிப்பதை எளிதாக மாற்ற பயன்படுகிறது.
 • கற்பூர எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் தசை பிடிப்பு மற்றும் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.
 • முகப்பருவுக்கு சிறந்த நிவாரணி கற்பூரம், தினமும் தண்ணீரில் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால், நிவாரணம் கிடைக்கும். வாயுக்குள் போகாமல் பார்த்துக் கொள்ளவும்.
 • காயம் ஏற்பட்ட புண்ணில் வலி இருந்தால், பூச்சி கடித்து இருந்தால் நேரடியாக அந்த இடத்தில் கற்பூரம் தடவினால் சிறிது நேரத்தில் வலி இருக்காது. தீக்காயம் ஏற்பட்டு இருக்கும் இடத்தில் தண்ணீருடன் கற்பூரம் கலந்து தடவ வேண்டும். தீ தழும்பு மறையும்.
 • கற்பூர எண்ணெய் ஒரு இயற்கை பூச்சிக்கொல்லியாக செயல்படும். அதற்கு அரை கப் சுடுநீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அத்துடன் 20 துளிகள் கற்பூர எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து பூச்சி அல்லது கொசுக்கள் வரும் பகுதிகளில் தெளிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் 4-5 கற்பூரத்தைப் போட்டு அறையில் வைத்தால் கொசுக்கள் வராது
 • நகத்தில் பூஞ்சை ஏற்பட்டால் தொடர்ந்து கற்பூரம் தேய்த்து வந்தால் குறையும். வராமல் தடுக்கப்படும். இதில் இயற்கையாகவே பூஞ்சையைப் போக்கும் நிவாரணி உள்ளது.
 • கால் வெடிப்பு இருந்தாலே மனது கஷ்டமாகவும், அசிங்கமாகவும் உணர நேரிடும். தண்ணீரில் கற்பூரம் கலந்து காலை சிறிது நேரம் ஊறவைத்து, பின்னர் தேய்த்துக் கழுவி, க்ரீம், பெட்ரோலியம் ஜெல்லி தடவி வர வெடிப்பு போயே போய்விடும்.
 • இடுப்பு வlலியைப் போக்க ஆலிவ் எண்ணெய்யில் கற்பூரம் கலந்து சிறிது சூடு செய்து தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
 • கற்பூரம் தோல் அரிப்பு மற்றும் எரிச்சலை நீக்குகிறது. உங்களது தோலில் சிவப்பு நிறத்தில் தழும்புகள் இருந்தால், கற்பூரத்தை பேஸ்ட் ஆக குலைத்து தடவவும். உடனடி நிவாரணம் கிடைக்கும். இது நரம்புகளைத் தூண்டி, சிவப்பு நிறத்தையும் நீக்குகிறது.

 

முட்டைகள் எத்தனை ?

முட்டைகள் பல்வேறு பெண் உயிரினங்களால்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon