Primary Menu

Top Menu

July 21, 18

கர்நாடகா முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா !!

கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில் தற்போது, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

இதனால் காங்கிரஸ், மஜத இரண்டு கட்சிகளுக்கும் தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இரண்டு கட்சியின் எம்எல்ஏக்களும் தற்போது கர்நாடகாவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மிகவும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள் அந்த சொகுசு விடுதிக்கு வெளியே பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள்.

Leave a Reply