Primary Menu

Top Menu

October 18, 18

கா்நாடகா சட்டசபை தேர்தல் : பா.ஜ.க வெற்றி

கா்நாடகா சட்டசபை தோ்தலுக்கான நடைபெற்று வரும் நிலையில் பா.ஜ.க. 115 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது.

கா்நாடகாவில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற சட்டசபை தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தமாக 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அமைந்தன.

113 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனிப்பெரும்பான்மை என்ற நிலையில் தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் 115க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது.

முதல்வா் சித்தராமையா இரு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் சாமுண்டீஸ்வரி தொகுதியில், 13 ஆயிரத்து 730 வாக்குகள் பின் தங்கி உள்ளாா். மற்றொரு தொகுதியான பதாமி தொகுதியில் அவா் முன்னிலை பெற்று வருகிறாா்.

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எடியூரப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்  திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon