Primary Menu

Top Menu

August 18, 18

கனிமொழி திடீர் மயக்கம்!!

கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில், மிக மோசமான அளவுக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால், கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கே நிற்க இடம் இல்லாத வகையில், நெருக்கடி ஏற்பட்டது.  இந்நிலையில், அங்கு நின்றிருந்த கனிமொழிக்கு, உடலில் சர்க்கரை அளவு குறைந்த காரணத்தால், திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு நிர்வாகிகள், ‘சாக்லேட்’ ஏற்பாடு செய்து கொடுத்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த தொண்டர்கள், கருணாநிதியின் உடலை பார்க்க முயற்சித்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறினர் பல்நோக்கு மருத்துவமனை வளாகம், கலைவாணர் அரங்கம், மெட்ரோ ரயில் நிலையம், சிவானந்தா சாலை என, நாலாபுறமும் தள்ளுமுள்ளுவில் சிக்கி, 100க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் நசுங்கினர். பெண்கள், முதியவர்கள் பலர் மயங்கி விழுந்தனர். ‘108’ ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மயங்கியவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கருணாநிதி உடலை பார்க்க வந்தவர்கள், மலர் வளையம், பூமாலைகள் எடுத்து வந்து, உடல் இருந்த பெட்டியின் மீது வைக்க முயன்றனர். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.  வி.வி.ஐ.பி.,க்கள் மட்டும், மலர் வளையம் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. உடல் இருந்த பெட்டியை, நிர்வாகிகளிடம் இருந்த தோள் துண்டுகளை வாங்கி, போலீசார் துடைத்தனர்.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon