Primary Menu

Top Menu

October 18, 18

தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்த கனா இயக்குனர்

‘கபாலி’ படத்தில் நெருப்புடா பாடலை பாடி பிரபலமானவர் அருண்ராஜா காமராஜ். நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகராக இருந்து வந்த அவர் தற்போது இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்திற்கு கனா என்று தலைப்பு வைக்கப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது.

இதனை கண்ட நடிகர் விஜய், இப்படத்தை இயக்கும் அருண்ராஜா காமராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துஅருண்ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னை உற்சாகப்படுத்தவும் பாராட்டவும் தவறாத எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா. உங்களிடம் இருந்து வாழ்த்தும், ஆசீர்வாதமும் பெற்றதில் நான் பாக்கியம் செய்துள்ளேன். உங்களுக்கு நன்றி மட்டும் சொன்னால் தகாது. உங்களை எப்போதுமே நேசிக்கும் அருண்ராஜா காமராஜ்” என்று பதிவு செய்துள்ளார்.

தர்ஷன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஜோடி சேர்ந்து நடிக்க, சத்யராஜ் ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா வேடத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் ஓர் இளம்பெண் எதிர்கொள்ளும் சிரமங்களே இந்தப் படத்தின் ஒன்லைன் கதை. ‘கனா’ டைட்டிலுக்கு கீழே உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என கேப்ஷனும் போடப்பட்டுள்ளது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைக்கிறார்.

 

 

 

வடசென்னை சினிமா விமர்சனம்!!

படத்தின் தொடக்கத்திலேயே ஒரு கொலை...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon