Primary Menu

Top Menu

July 17, 18

கமல்ஹாசன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சபரிநாதன் கைது

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் திட்டக்குடியைச் சேர்ந்த சபரிநாதன் திருவல்லிக்கேணியில் ஜூஸ் கடையில் வேலை செய்து வந்தார். கமலின் ரசிகரான அவர் நேற்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டுக்குச் சென்றுள்ளார். கமல் வீட்டில் இல்லை எனவும், பார்க்க முடியாது எனவும் காவலாளி கூறியுள்ளார். இதையடுத்து அங்கேயே சிறிது நேரம் காத்திருந்த சபரிநாதன், காவலாளி அங்கில்லாத நேரத்தில் சுவர் ஏறி கமல் வீட்டு வளாகத்திற்குள் குதித்துள்ளார்.

அங்கு வீட்டுக் கதவு பூட்டப்பட்டிருந்ததால் திரும்பி வந்துவிட்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். அங்கு சென்ற போலீசார் சபரிநாதனை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் உயர் அதிகாரிகள் கைது செய்யுமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து சபரிநாதன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்!

சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின்...

1 Comment

Leave a Reply