Primary Menu

Top Menu

September 22, 18

காளி  & ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’  – திரைவிமர்சனம்

காளி 

விஜய் ஆண்டனிக்கு எப்போதும் தன் கனவில் ஒரு பாம்பு, மாடு தெரிகின்றது. அமெரிக்காவில் முன்னணி டாக்டராக இருக்கும் இவருக்கு ஒரு கட்டத்தில் நாம் வளர்ப்பு மகன் தான் என தெரிய வருகின்றது. பிறகு தன் வளர்ப்பு பெற்றோர்கள் அனுமதியுடன் இந்தியா வர அங்கு தன் தாய் இறந்துவிட்டார் என தெரிகின்றது. அதே நேரத்தில் தன் தந்தை உயிருடன் இருப்பதை அறிந்த விஜய் ஆண்டனி தன் அப்பா யார் ? என்று தேடி செல்கின்றார். தன் தந்தை யார் தன் அம்மா ஏன் இப்படி ஆனார் என்பதை விஜய் ஆண்டனி கண்டுப்பிடிப்பதே மீதிக்கதை. படத்தின் முதல் பாதியில் பெரும் பங்கு வகிக்கிறார் யோகி பாபு. படத்தில் வரும் மூன்றாவது கதை அதில் சொன்ன விஷயம் கவர்கின்றது. விஜய் ஆண்டனியின் இசை படத்திற்கு பிளஸ். காதல் காட்சிகள் எந்த இடத்திலும் படத்தோடு ஒன்றிய காட்சிகளாக அமையவில்லை. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மொத்தத்தில் ‘காளி’ சுவாரஸ்யம் குறைவு.

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’  

பணக்கார தொழிலதிபர் நாசரின் ஒரே மகன் அரவிந்தசாமி. அடிதடி, கட்டப்பஞ்சாயத்து தான் இவருக்கு முழுநேர தொழில். மனைவியை இழந்த அரவிந்தசாமிக்கு ஆகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் படிக்கும் பள்ளியில் தான் கணவர் இல்லாத அமலாபால் மகள் ஷிவானியும் படிக்கின்றார். ஆகாஷ், ஷிவானி நண்பர்களாக மாற இந்த நட்பு அரவிந்தசாமி, அமலாபால் வரை நீடிக்கின்றது. இந்த நிலையில் ஆகாஷ் மற்றும் ஷிவானி ஆகியோர் அரவிந்தசாமியையும் அமலாபாலையும் இணைத்து வைத்து ஒரே குடும்பமாக வாழ விரும்புகின்றனர். இவர்களுடைய முயற்சி பலித்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்யும் நேரத்தில் திடீரென அமலாபாலின் கணவர் உயிருடன் வந்து நிற்கின்றார். அமலாபால் தனது கணவருடன் இணைந்தாரா ? அல்லது அரவிந்தசாமியுடன் இணைந்தாரா ? என்பதுதான் மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்கு பின் அமலாபால் கவர்ச்சியை ஓரம் கட்டிவிட்டு குடும்பப்பாங்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் நடிப்பு குறைவுதான். ஆகாஷ் கேரக்டரில் நடித்திருக்கும் மாஸ்டர் ராகவன் நடிப்பு இயல்பாக இருப்பதால் ரசிக்க முடிகிறது. ஆனால் நைனிகா நடிப்பு கொஞ்சம் ஓவராக உள்ளதால் சில இடங்களில் ரசிக்க முடியவில்லை. சூரி, ரோபோசங்கர், ரமேஷ்கண்ணா என மூன்று காமெடி நடிகர்கள் இருப்பதால் சிரிப்புக்கு பஞ்சமில்லை. முதல் பாதியை ஜாலியாக கொண்டு சென்ற இயக்குனர், இரண்டாம் பாகத்தில் சொதப்பிவிட்டார். அம்ரேஷ் கணேசனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுமார்தான். மொத்தத்தில் முதல் பாதிக்காக மட்டும் ஓர் முறை பார்க்கலாம்.

 

Comments

அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்

மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், ‘யோகன்’...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon