Primary Menu

Top Menu

September 22, 18

காலா படத்தின் விமர்சனம் : ரஜினி மாஸ்… ரஞ்சித் கிளாஸ்…

காலா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். பா.ரஞ்சித் இயக்கத்தில் 2வது படமாக அமைந்த இப்படம், ரஜினிகாந்தின் அரசியில் அறிவிப்பின் பிறகு வருவதால், எதிர்பார்ப்புகள் ஏராளம்.

படத்தின் கரு: நெல்லையில் இருந்து சென்று மும்பையில் தாதாவாக இருக்கும் காலா, தனது மக்களிடமிருந்து நிலத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் நில மாஃபியாக்களை எதிர்த்து நடத்தும் யுத்தமே ‘காலா’ திரைப்படத்தின் மையக்கரு.

படத்தின் பிளஸ் : ஸ்டைல் மன்னன் ரஜினியின் கபாலி படத்தை இயக்கிய பா. ரஞ்சித், காலா படத்தை பொழுதுபோக்கு, அனல் பறக்கும் வசனம் என்று ரசிகர்களுக்கு விருந்தாக அமைத்துள்ளார். படத்தில் அமைந்துள்ள சிறு சிறு விவரங்கள் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இயக்குனர் நினைப்பதற்கு கைகொடுக்குமாறு அமைந்துள்ளது சந்தோஷ் நாராயணனின் இசை. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தாகவே இருந்தாலும் கதைக்கு என்ன தேவையோ அதை செய்ய வைத்துள்ளார் இயக்குனர். காலாவின் மனைவியாக நடித்த ஈஸ்வரி ராவ் வரும் இடங்கள் அசத்தல். உமா குரேஷி-ரஜினியின் காட்சிகள் அற்புதம். படப்பிடிப்பு செட்டின் அசாதாரண அமைப்பு தயாரிப்பு குழுவின் கடின உழைப்பை காட்டியுள்ளது. படம் முழுக்க உங்களை இருக்கையின் நுனியில் வைத்திருப்பார் ரஜினி என்பதில் சந்தேகமில்லை. ரஜினி படத்திலேயே இதுதான் சிறந்த ஓப்பனிங் சீன் .

படத்தின் மைனஸ் : அரசியல் சார்ந்த கருத்துக்கள் காலா படத்தில் அதிகளவில் காணப்பட்டுள்ளது. படத்தில் அங்கங்கே கபாலியின் காதல் காட்சிகள் நினைவுக்கு வரும்படி உள்ளது.

மொத்தத்தில், காலா படம் ரஜினியின் சிறந்த நடிப்பையும் ரஞ்சித்தின் அசாதாரணமான உழைப்பையும் வெளிக்காட்டிய நல்ல படம்.

மதிப்பெண் – 3.5/5

ரஜினியின் காலா படத்தைப் பார்த்தவர்களில் பெரும்பாலானோர் டிவிட்டரில் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

கபாலி படத்தைவிட காலா நன்றாக இருக்கிறது என்றும், அதிலும் குறிப்பாக கிளைமாக்சில் வரும் வண்ணமயமான பாடல் காட்சி வாவ் என்றும் @GKanniappa  ரசிகர் தெரிவித்துள்ளார்.

படத்தில் அரசியல் நெடி அதிகம் என்றும், சக்தி வாய்ந்த வசனங்கள் இடம் பெற்றிருப்பதாகவும், ரஜினியின் நடிப்பு வேற லெவலில் இருப்பதாகவும் இந்த @RamnadLegend  ரசிகர் விமர்சித்துள்ளார்.

காலா படத்தின் முதல் பாதி ரஜினி படங்களுக்கே உரிய மாஸ் எண்டர்டெயிண்மெண்ட். இரண்டாம் பாதி ரஞ்சித் படங்களுக்கே உரிய உணர்வுப்பூர்வமான காட்சிகள் உள்ளதாகவும், மொத்தத்தில் இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் சரியான விருந்து என்கிறார் இந்த @prabuji ரசிகர்.

Comments

அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்

மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், ‘யோகன்’...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon