Primary Menu

Top Menu

August 15, 18

சிம் கார்டுடன் லேப்டாப் – ஜியோ அறிமுகம் !!

4ஜி சேவையில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களை அலறவிட்ட ஜியோ நிறுவனம், அடுத்தப்படியாக, சிம் கார்டுடன் லேப் டாப் மலிவு விலையில் அறிமுகம் செய்யப் போவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

4ஜி ஸ்மார்ட் போன்கள் இணைய வைஃபை சேவை உள்ளிட்டவை ஏற்கனவே  ஜியோவின் விற்பனை பட்டியலில் உள்ளன. ஆனால் சிம் கார்டு பொறுத்தக்கூடிய லேப்டாப்களை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதை அந்நிறுவனம் இதுவரை உறுதிபடுத்தவில்லை. சமீபத்திய தகவலின் படி வைஃபை இணைய வசதியுடன் கூடிய 50 லட்சம் லேப்டாப்புகள் ஆண்டுதோறும் விற்கப்படுகின்றன. ஆனால் இணைய வசதிகள் கொண்ட சிம் கார்டுடன் லேப்டாப்புகள் மலிவு விலையில்  விற்கப்பட்டால் அதற்கான சந்தை வாய்ப்பு பெரிய வரவேற்புடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

யு-டியூப்பில் பியானோ தேசீய கீதம் சாதனை

'யூ - டியூப்' எனப்படும் இணையதள வீடியோ...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon