Primary Menu

Top Menu

September 23, 18

ஜெயலலிதா மயங்கி விழுந்தார் – டாக்டர் சிவக்குமார் வாக்குமூலம்

2-ஆவது முறையாக ஆஜரான டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு 2 நாள்களுக்கு முன்பே வீட்டில் மயங்கினார் என்று வாக்குமூலம் அளித்தார்.

நீதிபதி அறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு முன்பு நடந்தவை, செப்டம்பர் 26-ஆம் தேதி வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முன்னர் சருமபிரச்சினைக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், ஆனால் அதனால் உடல்நலம் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்ததாக சொல்லப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு இருநாள்கள் முன்னரே ஜெயலலிதாவுக்கு லேசான காய்ச்சல் இருந்தது. வீட்டில் ஜெயலலிதா மயங்கி விழுந்தார். முதலுதவி அளித்த பின்னர் மருத்துவமனைக்கு ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்டார் என்றும், அப்போது தானும் உடன் இருந்ததாகவும் சிவக்குமார் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon