Primary Menu

Top Menu

June 24, 18

மௌன விரதத்தை திடீரென கைவிட்ட சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைந்து கிடக்கும் நிலையில், 2 மாதங்களுக்கு மேலாக மேற்கொண்டுவந்த மௌன விரதத்தை திடீரென முடித்துக்கொண்டிருக்கிறார்.

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு மௌன விரதத்தைத் தொடங்கிய சசிகலா 2 மாதங்களுக்கு மேல் மௌன விரத நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இந்நிலையில், திடீரென தனது மௌன விரத நாடகத்தை முடித்துவிட்டார் என்று தகவல் கிடைத்துள்ளது.

அண்மையில் சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் உரிமை கொண்டாடும் வீடுகள், நிறுவனங்களில் வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்ற போது, சசிகலாவிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முயன்றனர். அப்போது தான் மௌன விரதம் இருப்பதாகச் சொல்லி எஸ்கேப் ஆனார் சசிகலா.

இப்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையமும் சசியிடம் விசாரணைக்குக் குறிவைத்துள்ளனர். இதனால், விசாரணையில் சசிகலா தன் ஸ்டைலில் எதையும் உளறிக்கொட்டி வசமாக மாட்டிக்கொள்வார் என்று கருதப்படுகிறது.

கைலாஷ் யாத்திரைக்காக மத்திய அரசிடம் ராகுல் விண்ணப்பம்

கைலாஷ் மானசாரோவர் யாத்திரை செல்வதற்காக...

Leave a Reply