Primary Menu

Top Menu

September 21, 18

சசிகலாவுக்கு நீதிபதி ஆறுமுகசாமி எச்சரிக்கை

ஜெயலலிதா மரணம் குறித்து வாக்குமூலம் அளிக்காத சசிகலாவுக்கு நீதிபதி ஆறுமுகசாமி எச்சரிக்கை விடுத்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி அவருக்கு சம்மன் அனுப்பியது. ‘உண்மையிலேயே சசி கலாவுக்கு அக்கறை இருந்திருந்தால் ஆணையம் அமைக்கப்பட்டதும் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ காட்சியை உறவினரிடம் கொடுத்ததற்கு பதிலாக ஆணையத்தில் தாக்கல் செய்து இருக்கலாம். ஆணையம் அமைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டதும் முதல் ஆளாக சசிகலா தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும். அனைத்து உண்மைகளையும் சொல்வதற்கு சசிகலா முன்வரவில்லை’

சசிகலா தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை. மாறாக கால அவகாசம் கேட்டு 5 முறை மனு தாக்கல் செய்துள்ளார். சிகிச்சை என்ற பெயரில் மருத்துவமனையில் என்ன நடந்தது? என்பதை வெளிப்படுத்த சசிகலா விரும்பவில்லை என்று தெரிகிறது. மேலும் அவகாசம் கேட்ட சசிகலாவின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்த ஆணையத்துக்கு 2 வாய்ப்பு மட்டுமே உள்ளது. ஒன்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு நேரில் சென்று சசிகலாவின் வாக்குமூலத்தை பதிவு செய் வது. இன்னொன்று, சசிகலா தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை என்று கருதி எதிர்மறையான கருத்தை பதிவு செய்ய வேண்டியது தான். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

மக்கள் கொடுத்ததை திருப்பி கொடுப்பதாக கமல்ஹாசன் பேச்சு

60 ஆண்டுகளாக மக்கள் தனக்கு கொடுத்ததை...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon