Primary Menu

Top Menu

October 20, 18

ஜெ., மகள் என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை – அம்ருதா மனு தள்ளுபடி

தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய தாய் என்பதை டி.என்.ஏ மாதிரி மூலம் உறுதிப்படுத்தி, அவரது உடலை மீண்டும் சடங்குகள் செய்ய தம்மிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு தாக்கல் செய்தது.

1980 ஆகஸ்ட் 14-ம் தேதி அம்ருதா பிறந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அதே சமயத்தில் அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1980-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜெயலலிதா பங்கேற்ற சினிமா நிகழ்ச்சி வீடியோவில் அவர் கர்ப்பிணியாக இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதியாகி இருப்பதாக தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிட்டார்.

எனவே இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்கவும் டி.என்.ஏ. பரிசோதனை கோருவதற்கும் அம்ருதாவிடம் எவ்வித ஆதாரமும் இல்லை, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon