Primary Menu

Top Menu

September 22, 18

ஜல்லிக்கட்டு கலவர விசாரணையில் 126 பேர் ஆஜர் ஆகவில்லை – நீதிபதி ராஜேஷ்வரன்

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான விசாரணை அதிகாரி ஒய்வு பெற்று நீதிபதி ராஜேஷ்வரன் மதுரையில் பேட்டி.
நீதிபதி ராஜேஷ்வரன் பேட்டியில் பேசியதாவது :
“இன்று நடைபெற்ற விசாரணையில் கலவரம் தொடர்பான முக்கிய ஆவணங்களை காவல்துறை சமர்பித்துள்ளதாகவும் . சம்மன் அனுப்பியவர்கள் விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் கால தாமதம் ஆவதாகவும், விசாரணைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும், அப்போது தான் விசாரணையை விரைந்து முடிக்க முடியும் எனவும்,  மேலும்  ஏழாவது கட்ட விசாரணை துவங்கியதாகவும் இதில் 126 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும்,  இந்த விசாரணை முடிய 7, 8 மாதம் ஆகும் எனவும் , சென்னை, மதுரையில் மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், இன்றைய விசாரணையில் காவல்துறையினர் போராட்டத்தில் பேருந்துகள் உடைக்கப்பட்டது உள்ளிட்ட கலவர தொடர்பான புகைப்படம், குறுந்தகடு (சி, டி) ஆகியவற்றை தாக்கல் செய்துள்ளதாகவும்.”
விசாரணைக்கு மாதம் இருமுறை மதுரை வர விருப்பதாகவும், இன்னமும் 800க்கும் மேற்ப்பட்டோரிடம் விசாரணை செய்ய வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon